Home செய்திகள் புதுச்சேரி யார் பெயரையாவது வைத்துக் கொள்ளுங்கள்-மக்களை காப்பாற்றுங்கள்...

யார் பெயரையாவது வைத்துக் கொள்ளுங்கள்-மக்களை காப்பாற்றுங்கள்…

புதுச்சேரி பாரதிய மஸ்தூர் சங்கத்தின் அமைப்பு சாரா அணியின் ஒருங்கிணைப்பாளர் சந்துரு அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு 25 ஆம் தேதி செப்டம்பர் மாதம் கொண்டு வந்த பாரத பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தை 22 மாதங்களாகியும் புதுச்சேரி அரசு இன்று வரை செயல் படுத்தாமல் இருக்கிறது. சுமார் 10 கோடி குடும்பங்கள் பயன் பெறக்கூடிய இந்த மகத்தான மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதுச்சேரி மக்கள் பயன் பெற முடியாத வகையில் அரசு மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக இந்த திட்டத்தை அமல் படுத்தாமல் உள்ளது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்த திட்டம், மக்களுக்கு மிகுந்த ஒரு பயனை அளிக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. மக்கள் பாதுகாப்பு, கல்வி மற்றும் மருத்துவம் இது போன்ற விஷயங்களில் அரசு எந்த வகையான பாகுபாடும் பார்க்காமல் உடனடியாக மக்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. எனவே புதுவை அரசு எந்தவிதமான அரசியல் காழ்புணர்ச்சி இதில் காட்டாமல் மருத்துவ காப்பீடு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையும் எதிர்பார்ப்பும். பக்கத்து மாநிலமான தமிழகத்தில் கூட பல ஆண்டுகளாக மருத்துவ காப்பீடு திட்டம் என்பது மக்களுக்கு பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் புதுச்சேரியில் இன்று வரை இந்த மருத்துவ காப்பீடு திட்டம் என்பது செயல்படுத்தாமல் பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் வேதனையில் உள்ளார்கள். மத்திய அரசின் கட்சியினுடைய தலைவரின் பெயர்களோ அல்லது மாநிலத்தில் ஆளக்கூடிய கட்சிகளின் தலைவர்களின் பெயரோ எதை வேண்டும் என்றாலும் தாங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வாருங்கள் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..