Home செய்திகள் புதுச்சேரி விரைந்து வந்து காலத்தோடு உதவி - வெற்றிச்செல்வத்திற்கு பொதுமக்கள் பாராட்டு....

விரைந்து வந்து காலத்தோடு உதவி – வெற்றிச்செல்வத்திற்கு பொதுமக்கள் பாராட்டு….

புதுச்சேரி முதலியார்பேட்டை இந்திரா நகர் அண்ணா வீதியில் கடந்த ஜுலை 23ம் தேதி வியாழக்கிழமை இரவு 9.30 மணி அளவில் ஒரு வீட்டில் செல்போன் சார்ஜர் வழியாக ஏற்பட்ட மின் கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தெருவில் வசிக்கும் வெற்றி மக்கள் இயக்கத்தின் செயலாளர் கணபதி அவர்கள் வெற்றி மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வெற்றிச்செல்வம் அவர்களிடம் தகவல் தெரிவித்தவுடன் ,தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு உடனே நேரில் சென்று காலத்தோடு வந்து துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து கொண்டு இருந்த தீயணைப்பு துறையினருக்கு உதவியாக வெற்றி மக்கள் இயக்கத்தின் இளைஞரணி சார்ந்த நண்பர்களுடன் உதவி புரிந்தார். சரியான நேரத்தில் தீயை அணைத்து மேலும் தீ வேறு எங்கும் பரவாமல் சிறப்பாக, துரிதமாக செயல்பட்ட தீ அணைப்புத்துறை அதிகாரிகளுக்கும், தீ அணைப்பு காவலர்களுக்கும், முதலியார்பேட்டை காவல்துறையினருக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்து, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வெற்றி மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் வெற்றிச்செல்வம் ஆறுதல் கூறினார்.

சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளிடம் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிபுரிய வேண்டுகோள் விடுத்தார். தீ விபத்தில் பேருதவி புரிந்த அப்பகுதி பெரியோர்களுக்கும், பகுதி இளைஞர்களுக்கும், வெற்றி மக்கள் இயக்கத்தின் செயலாளர் கணபதி அவர்களுக்கும், இளைஞரணி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இந்திரா நகர் பகுதி பொதுமக்கள், இரவு நேரம் பார்க்காமல் தீ விபத்து ஏற்பட்ட உடன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து உறுதுணையாக இருந்த வெற்றி மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வெற்றிச்செல்வம் அவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..