Home செய்திகள் புதுச்சேரி தொடரும் சேவை - வெற்றி செல்வம் தலைமையில்....

தொடரும் சேவை – வெற்றி செல்வம் தலைமையில்….

கொரோனா தொற்றுக் கிருமியிலிருந்து நம்முடைய புதுச்சேரி மக்களை காத்திட, கொரோனா கிருமியை அழிக்கும் போரில் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்த, மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கும் முகக்கவசம் உணவு , அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து, இந்த ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி ஆரம்பித்த சேவையின் தொடர்ச்சியாக, வெற்றி மக்கள் இயக்கம் கொரோனா தொற்றுக் கிருமி நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 மருந்தை புதுச்சேரி மாநிலத்திலேயே முதன் முதலில் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி ஆரம்பித்து இதுவரையில் அனைத்துப் பகுதிகளுக்கும் 60 ஆயிரம் குடும்பத்தினருக்கு வெற்றி மக்கள் இயக்கத் தலைவர் வெற்றிச்செல்வம் தலைமையில் நேரடியாக வீடு வீடாக, கடை கடையாக சென்று இலவசமாக வழங்கினார்.

மேலும், முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் உள்ள 15 ஆயிரம் குடும்பங்களுக்கு நேரடியாக வெற்றி மக்கள் இயக்கத்தின் தலைவர் வெற்றிச்செல்வம் வீடு வீடாக சென்று இலவசமாக வழங்கி, தற்போது இரண்டாவது சுற்றாக, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும், அனைத்து வகையான அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும், அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும், இலவசமாக வழங்க ஏற்பாடு செய்து வெற்றி மக்கள் இயக்கத்தின் கொரோனா ஒழிப்புச் சேவையின் கடந்த 150 நாட்களுக்கு மேலாக புதுச்சேரி முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் லாக் டவுன் செய்யப்பட்ட அனிதா நகர், ஜெயம் நகர் உழவர்கரை மூலகுளம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா எதிர்ப்புசக்தி ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30 புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் நேரடியாக வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சேவையில் வெற்றி மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கணபதி, ஆனந்த், குமரவேல், பிரவீன், சுருதின், பி.ஆர்.டி.சி தொழிற்சங்க பிரமுகர் விவேகானந்தன், ஊர் பெரியோர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..