Home செய்திகள் புதுச்சேரி காலாவதியானது.... PIC Form.. புதுச்சேரி கல்வித்துறை அறிவுறு த்தல்...

காலாவதியானது…. PIC Form.. புதுச்சேரி கல்வித்துறை அறிவுறு த்தல்…

புதுச்சேரி வெற்றி மக்கள் இயக்கத் தலைவர் வெற்றிச்செல்வம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்தது. புதுச்சேரி அரசு மாணவர் சேர்க்கைக்கு படித்த பள்ளிகள் மூலமாகவும், இன்டர்நெட் மையங்கள் மூலமாகவும் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க பல்வேறு வழிமுறைகளை கூறியது.

தற்போது மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களுக்கு தங்களுடைய இருப்பிட மற்றும் ஜாதி சான்றிதழ் புதியதாக தேவைப்படுகிறது. கடந்த காலத்தில் புதுச்சேரி அரசின் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம் மூலம், பள்ளியில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர ஒருங்கிணைந்த சான்றிதழ் (PIC FORM) வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை ஒரு முறை பெற்று விட்டால் மாணவர்கள் தங்களின் மேற்படிப்பிற்காக கல்வி நிறுவனங்களில் சேரும் பொழுது புதுப்பித்துக் கொள்ளலாம் என்றுதான் அரசு கூறியது.

ஆனால் இன்றைக்கு பள்ளி தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்க செல்லும் மாணவர்களின் ஒருங்கிணைந்த நிரந்தர சான்றிதழ் (PIC FORM காலாவதியாகிவிட்டது, ஆகையால் மீண்டும் தாலுகா அலுவலகம் சென்று புதிய சான்றிதழ் பெற்று வரவேண்டும் என்று பள்ளிகளில் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த மன` உளைச்சலை ஏற்படுத்துகிறது.

இந்த கொரோனா கிருமித்தொற்று காலத்தில், வருவாய்த் துறையைச் சார்ந்த அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் கொரோனா ஒழிப்பு பணியில் ஓய்வில்லாமல் ஈடுபட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில், கடுமையான நோய் தொற்று பரவும் இந்த சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம் சென்று கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து ஜாதி உள்ளிட்ட தகுந்த சான்றிதழ்கள் பெற விண்ணப்ப மனு கொடுப்பதற்காக மணிக்கணக்கில் வரிசையில் நின்று, காற்றுபுகக் கூட இடைவெளியில்லாமல், கூட்டம் கூட்டமாக தாலுகா அலுவலகத்திற்கும், கல்வி நிறுவனங்களுக்கும், இன்டர்நெட் மையங்களுக்கும் அலைந்து திரிந்து கஷ்டப்படுவது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி, மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடும். ஒருமுறை ஒரு சான்றிதழ் பெற்று விட்டால் அந்த சான்றிதழ் போதுமானது என்ற ஒரு அறிவிப்பை புதுச்சேரி அரசு உடனே வெளியிட வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்கள் இல்லை என்ற சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் தகுந்த விசாரணை நடத்தி தகுந்த சான்றிதழ்கள் வழங்கலாம். இது போன்ற அசாதாரண சூழ்நிலை இந்த கொரோனா காலகட்டத்தில் ஏற்படுமேயானால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு விபரீத முடிவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகையால், புதுச்சேரி அரசு வருவாய் துறையை நிர்வாகிக்கும் உயர்திரு மாவட்ட ஆட்சியர் மூலம் கல்வித் துறைக்கும் கல்வி நிறுவனங்களுக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் மாணவர் பெற்றோர் சிரமங்களை கருத்தில் கொண்டு, ஏற்கனவே கடந்த காலத்தில் பெற்ற நிரந்தர ஒருங்கிணைந்த சான்றிதழயோ / தனியாக பெற்ற குடியுரிமை, ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்களையோ இணைத்து மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை, தகுந்த உத்தரவை வழங்கு வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..