Home செய்திகள் புதுச்சேரி செயலர் தலைமையில் கொரோனாவை தடுக்க தனி பிரிவு ஏற்படுத்த வேண்டும்-அதிமுக எம்.எல்.ஏ., அன்பழகன் வலியுறுத்தல்

செயலர் தலைமையில் கொரோனாவை தடுக்க தனி பிரிவு ஏற்படுத்த வேண்டும்-அதிமுக எம்.எல்.ஏ., அன்பழகன் வலியுறுத்தல்

புதுச்சேரியில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:

கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வரும் வேளையில் தடுத்து, கட்டுப்படுத்த வேண்டிய அரசு, தொடர்ந்து அலட்சியப்போக்குடன் நடந்து வருகிறது. இதனால் சாவு எண்ணிக்கையும் அதிகாமாகிக்கொண்டு வருகிறது. மக்களுடைய அச்சத்தையும், பயத்தையும் போக்கி ஆதரவோடு இருக்க வேண்டிய அரசு, வழக்கம் போல ஆளுநர், முதல்வர், அமைச்சர் என ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி மலிவு விளம்பர நாட்டத்திலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு சம்பந்தமாக அரசிடம் இன்று வரை எந்த ஒரு ஒருங்கிணைப்பும் கிடையாது. தினந்தோறும் பாதிப்பு நிலவரத்தை மட்டுமே கூறும் ஆட்சியாளர்கள் எந்தவொறு சிறு உருப்படியான நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்க கூடிய நிலையில் உள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் முதலமைச்சர் நாராயணசாமி வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் வர அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக கூறி வருகிறார். தான் ஒரு முதலமைச்சர் என்பதை மறந்துவிட்டு மக்களை பற்றி நினைக்காமல் வியாபாரி போன்று செயல்படுகிறார். இது ஒரு பொறுப்பற்ற செயலாகும்.

தன்னுடைய மாநிலத்தை பற்றி கவலைப்படாமல் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி பிரச்சனை குறித்து பேசி வருகிறார். சச்சின் பைலட்டை மீண்டும் கட்சிக்கு வர அழைப்பு விடுக்கும் முதல்வர், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தனவேலுவை கட்சிக்கு அழைக்காதது ஏன்? அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளராக இல்லாமல், மாநிலத்தின் முதலமைச்சராக நாராயணசாமியின் செயல்பாடு இருக்க வேண்டும்.

9000 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்தால் அது எதிர்வரும் தேர்தலை முன்னிருத்தி மக்களை ஏமாற்றகூடிய பட்ஜெட்டாகத்தான் இருக்கும். கடந்த ஆண்டு 8,400 கோடிக்கு தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே திட்டங்களை செயல்படுத்த பணம் இல்லை. இந்த ஆண்டு அரசின் வருமானம் 40 சதவீதம் குறையும். மத்திய அரசின் நிதி, கடன், வருமானம் ஆகியவைகளை சேர்த்தால் ரூ.7 ஆயிரம் கோடிதான் கிடைக்கும். எனவே இதற்கு பட்ஜெட் போட்டாலே போதும்.

இதுவரை திட்டக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை. எதிர்கட்சிகளின் கருத்துகள் கேட்கப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட்டில் கொரோனா தடுப்பு சம்பந்தமாக தனி தலைப்பின் கீழ் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தனி செயலர் தலைமையில் கொரோனா தடுப்பு பிரிவை உருவாக்கி, நிதி ஒதுக்கி பிளாஸ்மா சிகிச்சை, ஆரம்ப சுகாதார நிலையங்களை கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்புக்காக போதிய மருந்து மாத்திரைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை புதியதாக பணிக்கு எடுப்பது உள்ளிட்டவைகளை செய்ய வேண்டும்.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு, மின்துறயை தனியார் மயமாக்குவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும். எனவே பட்ஜெட்டை ஓரிரு நாட்களில் முடிப்பதை கைவிட்டு குறைந்தது 10 நாட்களாக நடத்த முன்வர வேண்டும். அரசுக்கு சொந்தமான 3 இடங்களை தேர்வு செய்து சட்டப்பேரவை நிகழ்வை அங்கு நடத்தலாம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..