Home செய்திகள் புதுச்சேரி மத்திய அரசு புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும் - அதிமுக அன்பழகன்...

மத்திய அரசு புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும் – அதிமுக அன்பழகன் எம்எல்ஏ கோரிக்கை.

புதுச்சேரி மாநில அஇஅதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளாக முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுநருடைய அன்றாட மோதல் போக்கினால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து புதுச்சேரி மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டது. இதை இருவரும் உணராமல் கொரோனா போன்ற இக்காலகட்டத்திலும் தினந்தோறும் முன்னுக்குப்பின் முரணான செய்திகளையும், அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகப்பெரிய குழப்பத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பற்ற செயலால் மக்கள் பெரிதும் நம்பியுள்ள அரசு நிர்வாகத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர்.

பட்டம் படித்து, ஆசிரியர் பணியில் உள்ளவர்களை இருவரின் போட்டி நிர்வாகத்தால் அதை தவிர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினரோடு இணைந்து ஆசிரியர் பெருமக்களை செயல்பட உத்தரவிட வேண்டும். மாண்புமிகு முதல்வர், மேதகு து நிலை ஆளுநரும் கொரோனா தடுப்பு, நிவாரணப்பணி மற்றும் நிவாரண உதவிகள் சம்பந்தமாக உருப்படியாக எந்த செயலிலும் ஈடுபடாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்தின் எண்ணிக்கை நிலவரத்தை மட்டுமே சொல்லிக்கொண்டு வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காத போது மேதகு துணைநிலை ஆளுநர் அவர்களாவது நமக்காக, எதையாவது செய்வார் என்ற மக்களின் நம்பிக்கை பொய்யாக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்துதான் அதிமுக புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருந்தோம். இக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததன் காரணமாகவும் புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மத்திய அரசு உடனடியாக புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும்.

முதல்வர் நாராயணசாமி பொறுப்பேற்றதில் இருந்து புதுச்சேரியின் முதல்வராக செயல்படுவதற்கு மாறாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராகவே செயல்பட்டு வருகிறார். அந்தவகையில்தான் தற்போது பிரதமருக்கு நாடு முழுவதும் மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார். ஆனால் தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள புதுச்சேரி மக்களுக்கு என்ன நிதியுதவி அளிக்கப்போகின்றோம் என்ற பேச்சே இல்லாமல் மவுனமாக உள்ளார்.

கொரோனா தொற்று நோயால் பெரும்பாலும் ஏழை மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களது வீடுகள் உள்ள பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அவர்கள் வேலைக்கு செல்ல முடிவதில்லை. அரசும் எந்தவித நிவாரணமும் வழங்குவதில்லை. இதனால் நோயின் பாதிப்பைவிட அதிகமாக எந்த ஒரு உதவியும் இல்லாமல் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களை அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் கூட தீண்டத்தகாதவர்களாக நினைத்து ஒதுக்கி வைக்கின்றனர். அதுபோல் மருத்துவமனையில் இருந்து வந்தவர்களுக்கும் அதுபோல் அவரது குடும்பத்தாருக்கும் ஏற்கனவே பணிபுரிந்த இடத்தில் வேலையும் வழங்குவதில்லை. ஒன்று அல்லது இரண்டு மாதம் கழித்து வாருங்கள் என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர். எனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்து மருத்துவமனையில் வீடு திரும்புபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அதுபோல் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.

உப்பளத்தில் 25 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அரசு எந்தவிதமான சிறு உதவியும் இன்றுவரை செய்யவில்லை. மேலும் 500க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று இருக்கலாம். இதனால் நடமாடும் பரிசோதனை கூடம் மூலம் கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதனைத் தொடர்ந்து நடமாடும் பரிசோதனை கூடம் மூலம் ஒருநாள் மட்டும் உப்பளத்தில் முகாம் நடத்தப்பட்டது. அன்றும்கூட 100 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது. இது போதுமானது அல்ல. எனது தொகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது, கொரோனா தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் பரிசோதனை கூடம் மூலம் ஒருநாள் விட்டு, ஒருநாள் பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..