Home செய்திகள் புதுச்சேரி பாஜக அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க முன் வரவேண்டும்-அதிமுக அன்பழகன் எம்எல்ஏ கோரிக்கை

பாஜக அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க முன் வரவேண்டும்-அதிமுக அன்பழகன் எம்எல்ஏ கோரிக்கை

புதுச்சேரி மாநில அஇஅதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆட்சியில் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்வதாக குற்றம் சாட்டிய முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்து வந்ததுடன், தற்போது இடைக்கால பட்ஜெட்டிற்கான காலக்கெடு முடிந்தும் பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் உள்ளார். புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசின் அலட்சிய போக்காலும், மத்திய அரசின் ஏதேச்சதிகாரமான பாராமுகத்தன்மையாலும், அரசின் நிர்வாக செலவினங்களுக்கு உயிர் மூச்சாக உள்ள பட்ஜெட் காலம் கடந்தும் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளது.
இதனால் இம்மாத 1ம் தேதியில் இருந்து அரசு சார்பில் எந்த ஒரு அவசியமான செலவினங்களும் செய்ய முடியாத தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு 1963 யூனியன் பிரதேச சட்டத்தில் நம் மாநில அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் அனுமதியை வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் ஆண்டுதோறும் நம் மாநிலத்திற்கு மாநில அரசால் இறுதி செய்யும் பட்ஜெட் அளவை மத்திய அரசு நிதி நிலமைக்கு ஏற்ப அனுமதி வழங்குவது என்பது நடைமுறையாக உள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு பாதிப்பால் நிதி சரிவு ஏற்பட்டது. இதை அரசு கணக்கில் கொள்ளாமல் காலத்திற்கு ஒவ்வாத அளவில் 1250 கோடி ரூபாய் அளவிற்கு கடந்த ஆண்டைவிட அதிகமாக செலவின பட்ஜெட்டிற்கு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. அதனால் இன்றுவரை மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை, மார்ச் மாத இறுதியிலேயே இவ்வாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அனைத்து முகாந்திரமும் இருந்த சூழ்நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் வழக்கம்போல அலட்சியத்துடன் செயல்பட்டது.
ஒவ்வொரு நிதியாண்டும் மாநில அரசு அனுப்பும் பட்ஜெட் அறிக்கையை ஒரு சில தினங்களில் ஏற்று அதில் திருத்தம் தேவைப்பட்டால் மாநில அரசுக்கு அறிவுரை கூறி உடனடியாக அனுமதி வழங்கி வருவது மத்திய அரசின் கடமையாகும். கடந்த 2, 3 ஆண்டுகளாக மத்திய அரசு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிர்மாறாக செய்வதாக நினைத்துக்கொண்டு பட்ஜெட்டிற்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவதால் மாநில நிர்வாகமே இன்றைக்கு ஸ்தம்பித்து போய் உள்ளது. 1ம் தேதியில் இருந்து எந்த ஒரு செலவினமும் செய்ய முடியாத நிலமைக்கு அரசு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி முதியோர். விதவைகளுக்கு உதவித்தொகை வழங்க சட்டமன்றத்தின் அனுமதி தேவை.
கொரோனா காலகட்டத்தில் அவசியமான செலவினங்களைக்கூட அரசு அதிகாரிகள் செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் கொரோனா வைரஸ் தாக்குதல், மறுபுறம் அரசு நிர்வாகம் செயல்படாத நிலை. இதுபோல் எந்த காலத்திலும் இல்லாத பரிதாப நிலைக்கு நம் மாநில அரசு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு ஆளும் காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் ஆகும்.
இது மாநில உரிமை மீது அடக்குமுறையை மத்திய அரசு கையாள்வது போன்ற உள்ளது. ஒரு காலத்தில் 90 சதவீத நிதியை மானியமாக மத்திய அரசு நமக்கு வழங்கிய நிலையில் நாம் நம்முடைய செலவினங்களுக்கும், பட்ஜெட்டிற்கும் மத்திய அரசின் அனுமதியை கேட்டுக் கொண்டிருந்தோம். தற்போது நம் மாநிலத்திற்கு மத்திய அரசின் மானிய நிதி வெறும் 20 சதவீதமாக குறைத்துவிட்ட நிலையில், பட்ஜெட்டிற்கு மத்திய அரசின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருப்பது தேவையற்ற ஒன்றாகும். எனவே இதில் உரிய சட்டத்திருத்தத்தை கொண்டுவர மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். மத்தியில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் புதுச்சேரி மாநிலத்தினுடைய உரிமையை காலில் போட்டு நசுக்கும் விதத்தில் செயல்பட்டதால் இன்றைக்கு நாம் தொடர்ந்து பல விஷயங்களில் அவமானப்படுத்தப்பட்டு வருகிறோம்.
எனவே தற்போது மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக அரசானது புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சிறப்பாக எந்த ஒரு மானிய உதவியும் வழங்காத நிலையில் நம் மீது தேவையற்ற அதிகாரத்தை திணிப்பதை விட்டுவிட்டு, புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்தை வழங்க முன்வர வேண்டும். மத்தியில் திமுக துணையோடு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி செய்த அதே தவறை தற்போதைய மத்திய பாஜக அரசும் செய்யாமல் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில உரிமையை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

வரி வருவாயை பெருக்க வேண்டும் – திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா கோரிக்கை…

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடைகள்,...

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் – பாஜக சாமிநாதன் கோரிக்கை….

பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பொதுப் பணித்துறையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதுவை, காரைக்கால் மற்றும்...

நம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்-மத்திய அரசின் கல்விக்கு கொள்கைக்கு வெற்றிச்செல்வம் பாராட்டு…

வெற்றி மக்கள் இயக்க நிறுவனர் வெற்றிச்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் பிற நாடுகளுக்கு இணையான வளர்ச்சி பெற கல்வி கொள்கையில் மாற்றம்...

ஒரே நாடு… ஒரே கல்வி முறை…

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், எல்லோரும் ஓர்குலம்… எல்லோரும் ஓரினம்… எல்லோரும் இந்தியமக்கள்… எல்லோரும் ஓர்...
× i interes to join whatsapp group..