Home செய்திகள் மீனவர்கள் கடலில் இறங்கி கருப்புக்கொடியுடன் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து போராட்டம்

மீனவர்கள் கடலில் இறங்கி கருப்புக்கொடியுடன் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து போராட்டம்

மீன்பிடி தடைக்காலத்தின்போது மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை வழங்க கவர்னர் கிரண்பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையொட்டி அவரை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்து இருந்தனர். அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தடைக்காலம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி வந்தன.

இந்தநிலையில் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த கோரிக்கைக்காக மீனவர்கள் அறிவித்து இருந்த போராட்டம் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே சட்ட சபையில் அறிவித்தபடி மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணமாக ரூ.7,500, புயல் நிவாரணத்தொகை (சேமிப்பு தொகை) ரூ.4,500, மீன் விற்கும் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், கொரோனா நிவாரண நிதி தலா ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

புயல் நிவாரணத்தொகை ரூ.4,500 வழங்க மத்திய அரசு அனுமதித்தும் அதனை வழங்க கவர்னர் கிரண்பேடி தடையாக இருப்பதாக கூறி அவருக்கு கண்டனம் தெரிவித்து தங்களது படகுகளில் கடலுக்குச் சென்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக்கொடி, பலூன்களை பறக்க விட்டபடி காந்தி சிலை மற்றும் தலைமை செயலகம் அருகில் திரண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீனவர்கள் வந்து இருந்தனர்.

நூறுக்கும் மேற்பட்ட படகுகளில் ஏராளமான மீனவர்கள் காந்தி சிலை- தலைமைச் செயலகத்திற்கு இடைப்பட்ட பகுதியில் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

மீனவர்களின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர் கடற்கரைக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். ஒரே நேரத்தில் நூறுக்கும் மேற்பட்ட படகுகளில் வந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

ரெயில்களை தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும்- முதல் அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் பரிசோதனைகளையும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக்...

ஆகஸ்டு 17-ந்தேதி முதல் புதுவை பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் தொடக்கம்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட...

இலாஸ்பேட்டை பெத்துச்செட்டிப்பேட்டையில் பாஜக சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

இலாஸ்பேட்டையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவரும் தற்போதைய சூழ்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அறிவுறுத்தலின்படியும், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமாகிய சாமிநாதன் எம்எல்ஏ...

இலாஸ்பேட்டை இந்தியன் வாங்கியில் பாஜக சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இலாஸ்பேட்டை கொரோனா தொற்று மிகவேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமாகிய சாமிநாதன் எம்எல்ஏ அவர்களின் வழிகாட்டுதலின்படி பராசக்தி மாநில...

இலாஸ்பேட்டையில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நிவாரணம்-சாமிநாதன் எம்எல்ஏ வழங்கினார்…

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் அவர்கள், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான...