Home மற்றவை கல்வி திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு-யுஜிசி அறிவிப்பு

திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு-யுஜிசி அறிவிப்பு

இந்த 2020-21 கல்வியாண்டில் திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதவற்கு பல்கலைக்கழக, கல்லூரிகளிடம் இருந்து, இந்த 2020-21 கல்வியாண்டில் திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதவற்கு பல்கலைக்கழக, கல்லூரிகளிடம் இருந்து விண்ணப்பஙகள் வரவேற்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

National Skills Qualifications Framework (NSQF) எனப்படும் தேசிய திறன் தகுதி கட்டமைப்பின் கீழ் திறன் வளரப்பு படிப்புகளுக்கான நெறிமுறைகளை அண்மையில் யுஜிசி மாற்றி அமைத்தது. அதனைத் தொடர்ந்து, திறன் வளர்ப்பில் சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு, முதுநிலை டிப்ளமோ, பி.வோக், எம்.வோக், ஆராய்ச்சி படிப்பு ஆகியவைகள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், 2020-21 கல்வியாண்டில் புதிதாக திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்குவதற்கு பல்கலைக்கழக, கல்லூரிகளிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய நெறிமுறைகளின்படி, திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்கும் கல்வி நிறுவனங்கள், யுஜிசியின் நிதியுதவி, பெற முடியும்.

அதாவது, திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்குவதற்கான ஆய்வகங்கள் அமைத்தல், கற்றல், கற்பித்தல், உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துததல், ஆய்வக உபகரணங்களை கொள்முதல் செய்தல் ஆகியவற்றுக்கு தேவையான நிதியை யுஜிசி வழங்கும்.

எனவே, மேற்கண்ட திறன் வளர்ப்பு படிப்புகளை வழங்குவதற்கு ஆர்வம் உள்ள கல்வி நிறுவனங்கள், ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு யுஜிசி.,யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

ரெயில்களை தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும்- முதல் அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் பரிசோதனைகளையும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக்...

ஆகஸ்டு 17-ந்தேதி முதல் புதுவை பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் தொடக்கம்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட...

இலாஸ்பேட்டை பெத்துச்செட்டிப்பேட்டையில் பாஜக சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

இலாஸ்பேட்டையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவரும் தற்போதைய சூழ்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அறிவுறுத்தலின்படியும், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமாகிய சாமிநாதன் எம்எல்ஏ...

இலாஸ்பேட்டை இந்தியன் வாங்கியில் பாஜக சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இலாஸ்பேட்டை கொரோனா தொற்று மிகவேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமாகிய சாமிநாதன் எம்எல்ஏ அவர்களின் வழிகாட்டுதலின்படி பராசக்தி மாநில...

இலாஸ்பேட்டையில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நிவாரணம்-சாமிநாதன் எம்எல்ஏ வழங்கினார்…

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் அவர்கள், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான...