Home செய்திகள் ஓம் நந்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளை சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் கபசுரகுடிநீர் வழங்கினார்

ஓம் நந்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளை சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் கபசுரகுடிநீர் வழங்கினார்

புதுவை, பாக்கமுடையான்பட்டு ஓம் நந்தீஸ்வரர் அன்னதான அறக்கட்டளை சிவனடியார் ரவி அவர்கள், புதுவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் காவல்துறை மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நோய் பரவாமல் தடுக்க கபசுரகுடிநீர், சுக்கு டீ உள்ளிட்டவற்றை வழங்கி வந்தார். தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேலாக அவர் கொடுத்த வந்த மூலிகை டீயினால் காவல்துறை மற்றும் துப்புரவு தொழிலாளிகள் புத்துணர்வு அடைந்தனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதும், சிவனடியார் ரவி மூலிகை டீ கொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

இதனையடுத்து புதுச்சேரியில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தற்போது ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

இதனால், மீண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரகுடிநீர், மூலிகை டீயினை தினமும் காலை, இரவு வேளைகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

ரெயில்களை தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும்- முதல் அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் பரிசோதனைகளையும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக்...

ஆகஸ்டு 17-ந்தேதி முதல் புதுவை பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் தொடக்கம்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட...

இலாஸ்பேட்டை பெத்துச்செட்டிப்பேட்டையில் பாஜக சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

இலாஸ்பேட்டையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவரும் தற்போதைய சூழ்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அறிவுறுத்தலின்படியும், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமாகிய சாமிநாதன் எம்எல்ஏ...

இலாஸ்பேட்டை இந்தியன் வாங்கியில் பாஜக சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இலாஸ்பேட்டை கொரோனா தொற்று மிகவேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமாகிய சாமிநாதன் எம்எல்ஏ அவர்களின் வழிகாட்டுதலின்படி பராசக்தி மாநில...

இலாஸ்பேட்டையில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நிவாரணம்-சாமிநாதன் எம்எல்ஏ வழங்கினார்…

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் அவர்கள், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான...