பாரதிய மஸ்தூர் சங்கத்தில் இருக்கும் அமைப்பு சாரா மற்றும் கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0
131
====================ADVERTISEMENT====================

புதுவை மாநில பாரதிய மஸ்தூர் சங்கம் கட்டிட மற்றம் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  1. அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் நிவாரண தொகையை விடுபட்டிருக்கு கூடிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், மேலும் நிவாரண தொகை ரூ. 5000ம் வழங்கிட வேண்டி.
  2. அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு சங்கம் மற்றும் வாரியத்தின் மூலமாக நபர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வங்கி கடன் பெற்றுக் கொடுக்க வேண்டி.
  3. அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு சிகப்பு நிற ரேஷன் கார்டு வழங்கிட வேண்டி.
  4. மணல் தட்டுப்பாட்டல் பல அமைப்பு சாரா தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருவதால் மணல் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
  5. உ.பி., ம.பி., குஜராத் போன்ற மாநிலங்களில் தொழிலாளர்களின் சட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதையும், புதுவை மற்றும் பல மாநிலங்களில் வேலை நேரத்தை எட்டு மணியில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தியதையும், மத்திய மாநில அரசுகளின் முக்கிய பிரிவுகளை தனியார் மயமாக்குவதையும் புதுவையில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பதையும் பல அரசு சார்பு நிறுவனங்களுக்கு சம்பளம் வழங்காததையும் கண்டித்து 20-05-2020 அன்று சமூக இடைவெளியை கடைபிடித்து மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மே 18ம் தேதி தொழிலாளர் துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளல் கலந்து கொண்டர்கள் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் திருமுருகன், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சந்துரு, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில கட்டுமான தொழிலாளர்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர், முருகன்(எ)ஏழுமலை, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவஞானம், பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில மையக்குழு உறுப்பினர் ஆசைத்தம்பி, பாரதிய மஸ்தூர் சங்கத்தின் மாநில மையக்குழு உறுப்பினர் பிரதீப்குமார் மற்றும் நிர்வாகிகள் வா.சா.காந்தி, ஐய்யனார், அருண்குமார் மற்றும் பாரதிய மஸ்து£ர் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here