புதுச்சேரியில் வேலை செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலம் செல்ல இலாஸ்பேட்டை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நடவடிக்கை

0
139
====================ADVERTISEMENT====================

மேட்டுப்பாளையம் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் இல் உள்ள பாலிபேக் தொழிற்சாலையில் வேலை செய்த பீகாரைச் சேர்ந்த 17 இளைஞர்கள் தங்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு நடந்து சென்றதை அறிந்த லாஸ்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் ஆகியோர்கள் அவர்களை இலாஸ்பேட்டை இசிஆர் சாலை சித்தானந்தா கோவில் சிவாஜி சிலை அருகில் நிறுத்தி அவர்களிடம் விசாரித்து எங்கு செல்கிறார்கள் என்பதை கேட்டறிந்து அவர்களை தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் தாசில்தார் தயாளன் அவர்களின் உதவியோடு செய்வதற்காக, அவர்கள் இருந்த இடத்திலேயே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

17 புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல அனைத்து உதவிகளும் இரண்டு நாட்களுக்குள் செய்து முடிக்கப்படும் என்று ஆய்வாளர் கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார். அப்போது வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் சுபம்கோஸ் அவர்கள் வந்து மேற்படி பீகார் இளைஞர்கள் விசாரித்து அவர்களுக்கு தக்க உதவி செய்ய ஆவண செய்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here