ஜிப்மரில்அவசர சிகிச்சைக்கு மட்டுமே அனுமதி – ஜிப்மர் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

0
93
====================ADVERTISEMENT====================

அவசர சிகிச்சை மட்டுமே, முன்பதிவின்றி அளிக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஜிப்மர் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து வியாதிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, கொரோனா பெருந்தொற்று காரணமாக திரளாக மக்கள் மருத்துவமனை வருவதற்கு அனுமதி அளிக்க இயலாத சூழ்நிலை உள்ளதால், மருத்துவமனை நிர்வாகம் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதன்படி, ஜிப்மர் வருவதற்கான குறுஞ்செய்தி அழைப்பு இல்லாமல் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட மாட்டர்கள். அவசர சிகிச்சைக்கு மட்டுமே முன்பதிவின்றி அனுமதி அளிக்கப்படும். திங்கள் முதல் வெள்ளிவரை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரையிலும், சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணிவரை, பழைய நோயாளிகள் 0413–&2298200 என்ற தொலைபேசி எண்ணிலும், புதிய நோயாளிகள் 0413&-2298303 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
அதன்பின்னர், 24 மணி நேரத்திற்குள், உங்களை ஒரு சிறப்பு மருத்துவர் தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அதற்குரிய தேதி மற்றும் நேரம் உங்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

Advertisement

உங்கள் மருத்துவர் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்பு மூலமாக ஆலோசனை வழங்குவார். தேவைப்பட்டால் அவர் ஜிப்மர் மருத்துவமனைக்கு உங்களை வருமாறு அழைப்பார். அதற்காக பிரத்யேகமாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கும் மருந்து குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்

ஜிப்மர் இணையதளத்தில் உள்ள நோயாளிகள் இணைய முகப்பில் (HIS (‘patient portal’) அல்லது http://his.jipmer.edu.in:8080/ors/(S(mwnbn3oacsxdwytgt2udm5na))/Startup/Login.aspx என்ற இணைய முகவரியில் தங்கள் மருத்துவமனை பதிவு எண் மற்றும் கைபேசி எண் கொண்டு மருத்துவர் பரிந்துரைக்கும் மருத்துவ சீட்டை பெற்றுக்கொள்ளலாம். நோயாளிகள் ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து கையிருப்பிற்கு ஏற்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here