அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்தால் மாபெறும் போராட்டம் – அதிமுக அன்பழகன் எச்சரிக்கை

அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்தால் மாபெறும் போராட்டம் - அதிமுக அன்பழகன் எச்சரிக்கை

0
96
====================ADVERTISEMENT====================

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

ஊரடங்கு அமலில் இருந்த போது பலமுறை கேபினட் கூடியுள்ளது. இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு இதுவரை கூறவில்லை. தொடர்ந்து பலமுறை புதுவை மாநில வருவாய் பெருக்குவதற்கு கலால்துறை, போக்குவரத்து துறை, கேபிள் டி.வி., துறைமுக அபிவிருத்தி திட்டம் போன்ற பல விஷயங்களில் அரசு கவனம் செலுத்தி வருவாய் பெருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒருசிலர் வருமானம் ஈட்ட மாநில ஒட்டுமொத்த வருவாயை இழக்கக்கூடாது என பலமுறை அ.தி.மு.க. சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. துணையுடன் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் இப்போது கூட தன்னுடைய கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் செய்யக்கூடிய மதுபான தொழிலில் அவர்களுக்கு நட்டம் ஏற்பட்டு விடும் என்பதற்காக மாநில முதல்வர் மதுபான கொள்கை விஷயத்தில் தொடர்ந்து தடுமாற்றத்துடன் இருந்து வருகிறார்.

மதுபான விலை ஏற்றம் என்பது குடிபிரியர்கள் தலையில் தான் வைக்கப்படுகிறது. இந்த தொழிலில் நியாயமாக கார்ப்பரேஷன் அமைத்தோ அல்லது மொத்த மதுபான விற்பனையை அரசு கையில் எடுத்தோ சில்லரை கடைகளை ஏலம் விட்டு அரசாங்கத்திற்கு வரவேண்டிய ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வருமானத்தை கவனிக்கவில்லை.அரசு ஊழியர் வருமானத்தில் ஒரு பங்கை பிடிக்க இருப்பதாகவும், அரசு ஊழியர்கள் பல்வேறு தியாகத்திற்கு தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும் என முதல்வர் கூறுவது ஏற்புடையது அல்ல.

Advertisement

வருவாய் பெருக்குவதற்கு உள்ளங்கையிலேயே தெள்ளத் தெளிவாக வழிமுறைகள் இருந்தும் அதை செய்யாமல் அரசு ஊழியர்கள் தலையில் கையை வைப்பது சிறந்த முதல்வருக்கு அழகல்ல.அரசு ஊழியர்களிலேயே ஏ,பி,சி,டி என பல்வேறு பிரிவுகள் உள்ளது. குரூப் ஏ வில் உள்ளவர்கள் சம்பளத்தை கூட குறிப்பிட்ட காலகட்டத்திற்கு குறிப்பிட்ட அளவை பிடித்தம் செய்யலாம். ஆனால் குரூப்&பி, சி, டி, குறைந்த அளவு வருமானத்தையே ஈட்டுகின்றனர். ஒட்டுமொத்த அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்வதை அரசு அமல்படுத்தினால் அ.தி.மு.க. இந்த அரசை எதிர்த்து மாபெரும் போராட்டத் தினை நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.

மத்திய அரசு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நல்ல திட்டங்களை அமல்படுத்துகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் தொழிலாளர்களுக்கு நேரடியாக அரசாங்கம் நிதி உதவியை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த கேட்டுக்கொள்கிறோம். அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதாக அறிவிப்புகள் வருகிறது.

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு அறிவித்துள்ளது, மின்துறை என்பது அரசு துறை. இதனை தனியார் மயமாக்கினால் மிக பெரிய அளவில் நுகர்வோர் பாதிக்கப்படுவர். புதுவையில் அரசு ரூ. 1250 கோடி மின்சாரத்தை வெளிமாநிலத்தில் இருந்து வாங்குகின்றனர். நுகர்வோருக்கு மின்சாரத்தை அதே விலைக்கு விற்பனை செய்கின்றனர், மத்திய அரசின் கீழ் இயங்கும் மின்சார ஒழுங்கு முறை இணை ஆணையத்தில் மின் கட்டணம் முடிவு செய்யப்படுகிறது, இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை.தனியார் மயமாக்கப்பட்டால் இஷ்டத்திற்கு விலையேற்றம் ஏற்படும், தனியார் மயமாக்குதல் சம்மந்தான அறிவிப்பில் காங்கிரஸ் அரசின் முடிவு என்ன என்பதனை இந்த கேபினட் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். பல முறை கேபினட் கூட்டப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு முறை பேரிடர் ஆணைய கூட்டத்தை முதல்வர் கூட்டுகிறார்.

ஆனால் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு எந்த பயனையும் அறிவிக்கவில்லை. குறிப்பான மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க நிதி இல்லை என கூறுகின்றனர், முதல்வர் நிவாரண நிதிக்கு, எனக்கு தெரிந்து ரூ.10 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது, இதனை என்ன செய்ய போகிறார்கள்? ஏழை மக்களுக்காக இந்த பணத்தை இதுவரை பயன் படுத்தவில்லை, அந்த பணத்தில் முதல்வர் தனக்கு தேவையான குறிப்பிட்ட துறைக்கு மட்டும் செலவு செய்வது கண்டிக்கதக்கது.
மஞ்சள் கார்டு உள்ளவர்களுக்கு அந்த பணத்தில் இருந்து கூட அரிசி, துவரம் பருப்பு கொடுக்கலாம். இன்றைய கேபினட் கூட்டத்தில் இதனை முடிவு செய்ய வேண்டும். மாநில நிதிநிலை சம்பந்தமாக சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்களின் கருத்துகள் கேட்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்து மாநில வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும், நிதி நிலையை மேம்படுத்துவதற்கும் ஏதுவாக இருந்தால் அரசியல் கண்ணோட்டத்துடன் அதனை அணுகாமல், ஏற்றுக்கொள்ள வேண்டும். கண்துடைப்பு நாடகத்திற்காக கருத்து கேட்ககூடாது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு மாநில நிதி நிலை சம்பந்தமாக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்க வேண்டும். அ.தி.மு.க. சார்பில் பல கருத்துகள் கூறப்படும். தனிப்பட்ட யாருக்கும் அ.தி.மு.க. எதிரி அல்ல ஒரு சிலர் திட்டமிட்டு அ.தி.மு.க.வை தவறாக பேசி வருகின்றனர் அ.தி.மு.க.வை பொறுத்த வரை மாநில வளர்ச்சிக்கும், மக்களுக்காகவே செயல்படும் ஒரு இயக்கம் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here