புதுவையில் மதுபான கடைகள் திறப்பு…!

ஊரடங்கு உத்தரவால் புதுவையில் 50 நாட்களுக்கும் மேலாக மதுபான கடைகள் மூடப்பட்டு கிடக்கிறது.

0
614
====================ADVERTISEMENT====================

புதுவையில் கலால்துறை மூலம் புதுவை அரசுக்கு சுமார் ரூ.1000 கோடி வருமானம் கிடைக்கிறது. மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 4-ந் தேதி ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் 7-ந் தேதி மதுபான கடைகள் திறக்கப்பட்டது. மதுபான கடைகளை திறக்க தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் புதுவையில் மதுபான கடைகள் திறப்பது தள்ளிப்போனது.

Advertisement

இதனிடையே ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் மதுபான கடைகள் 9-ந் தேதி முதல் மூடப்பட்டது. இதனால் புதுவையில் மதுபான கடைகளை திறப்பதில் சிக்கல் நிலவியது.

ஐகோர்ட்டு உத்தரவு புதுவைக்கும் பொருந்தும் என்பதால் மதுபான கடைகளை திறக்கும் முடிவை அரசு கைவிட்டது. மே 17-ந் தேதிக்கு பிறகு மதுபான கடைகளை திறக்கலாம் என அரசு முடிவெடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது மாநில அரசுகளின் முடிவு எனக்கூறி மதுபான கடைகளை திறக்க பச்சைக்கொடி காட்டியது. இதனையடுத்து மே மாதம் 16ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

புதுவையில் மதுபான கடைகள் திறப்பது எப்போது? என மது பிரியர்களின் கேள்வியாக எழுந்துள்ளது. மதுபிரியர்கள் அண்டைமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க புதுவையில் மதுபான கடைகளை திறக்க வேண்டும் என அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசும் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே புதுவை அமைச்சரவையில் மே 17-ந் தேதிக்கு பிறகு மதுபான கடைகளை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம் என தீர்மானித்திருந்தனர்.

இதனால் அநேகமாக நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் புதுவையில் மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. அதே நேரத்தில் மதுபான விற்பனையுடன் கூடிய ரெஸ்ட்டாரெண்டுகளுக்கு அனுமதி வழங்க காலதாமதமாகும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here