கல்வி கட்டணத்தை அரசே செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்-சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.ஜே. ஜெயபால் கோரிக்கை

தனியார் பள்ளிகள், கல்வி கட்டணம் செலுத்த மாணவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கேள்விப்பட்டேன். ஊரடங்கு காலத்தில் மிகவும் நிதி சுமைக்கு ஆளாகி இருக்கும் பெற்றோர்களின் சிரமத்தை கவனத்தில் கொண்டு அவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது அரசே செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்

0
162
====================ADVERTISEMENT====================

புதுச்சேரி கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.ஜே.ஜெயபால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய இந்திய அரசு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியுள்ளது. ஏறக்குறைய 50 நாட்கள் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. இப்படிப்பட்ட பேரிடர் காலத்தில் புதுவை அரசு நிவாரணமாக ரூ. 2000ம் மட்டும் அறிவித்து வழங்கியதோடு நின்றுவிட்டது. மேற்கொண்டு எந்த உதவியையும் மக்களுக்கு வழங்கவில்லை.

மத்திய மோடி அரசு அறிவித்து வழங்கிய சிகப்பு அட்டைக்கு நபர் ஒன்றுக்கு 15 கிலோ இலவச அரிசியை தொகுதியில் வழங்கும் பணி முடிந்து விட்டதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், விடுபட்டவர்கள் குடிமை பொருள் வழங்கு துறை அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அங்கே சரியான அணுகுமுறையின்றி பொது மக்கள் அலை கழிக்கப்படுகிறார்கள். எனவே, விடுபட்டவர்களுக்கு ரேஷன் கடை அல்லது அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் இலவச அரிசி வழங்கப்ட வேண்டும். மேலும், புதுவை அரசு அறிவித்தபடி மஞ்சள் அட்டைதாரர்களுக்கு உடனடியாக 30 கிலோ இலவச அரிசி வழங்கப்பட வேண்டும். அத்துடன் சிகப்பு அட்டைக்கு வழங்கியது போல் 3 கிலோ துவரம் பருப்பு வழங்க வேண்டும்¢ என கேட்டுக் கொள்கிறேன்.

Advertisement

மக்கள் முதல்வர், எதிர்கட்சி தலைவர் என்.ஆர்.அவர்கள் புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத்திற்கு நிவாரணமாக தலா ரூ.5000 வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி மீதம் உள்ள நிவாரண தொகையை அரசு உடனடியாக வழங்கிடவேண்டும்.
கதிர்காமம் அரசு மருத்துவமணையில் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோய் தொற்று உள்ளவர்களுக்கு சத்தான ஆகாரம் வழங்கப்படவில்லை என புகார் வருகிறது. அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, பயிறு வகைகள், பழங்கள் என வழங்கப்பட வேண்டும். மேலும், தற்சமயம் தமிழக எல்லை பகுதியை ஒட்டினாற் போல் உள்ள புதுச்சேரியை சேர்ந்த 2 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை மத்திய அரசு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கும் அருகில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம், இதனால், புதுவை மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும்.

ஊரடங்கு உத்தராவால் புதுவை அரசு அறிவித்த கடைகள் திறந்து இருக்கும் நேரத்தை மாற்றறி அமைக்க வேண்டும். இதனால், பொதுமக்கள் வியாபாரிகள் இருவருக்கும் பெரிய இடர்பாடுகள் இருக்கிறது. எனவே, இப்போது உள்ள காலவரையறை மாற்றி எப்போதும் போல் அனைத்து கடைகளும் வழக்கமாக செயல்பட அனுமதியளிக்க வேண்டும்.

மேலும், தனியார் பள்ளிகள், கல்வி கட்டணம் செலுத்த மாணவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கேள்விப்பட்டேன். ஊரடங்கு காலத்தில் மிகவும் நிதி சுமைக்கு ஆளாகி இருக்கும் பெற்றோர்களின் சிரமத்தை கவனத்தில் கொண்டு அவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது அரசே செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here