தமிழகத்தை பின்பற்றி சமூக இடைவெளியோடு மதுபானக் கடைகளை திறக்க முதல்வருக்கு அன்பழகன் எம்எல்ஏ யோசனை

தமிழகத்தை பின்பற்றி சமூக இடைவெளியோடு மதுபானக் கடைகளை திறக்க முதல்வருக்கு அன்பழகன் எம்எல்ஏ யோசனை

0
366
====================ADVERTISEMENT====================

புதுச்சேரி மாநில அஇஅதிமுக, சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

ஊரடங்கு உத்தரவின்போது கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்க மாண்புமிகு முதல்வரிடம் பல முறை தெரிவித்தும், மதுபான உரிமையாளர்களுக்கு சாதகமாக, எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் ஏற்பட்டது. ரூ.50க்கு விற்கப்படும் சரக்கு ரூ.600க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.
மக்களின் நலன் கருதி மேதகு துணை நிலை ஆளுனர் இப்பிரச்சனையில் தலையிட வேண்டும் என வேறுவழியே இல்லாமல் புகார் தெரிவித்து இருந்தேன். மேதகு துணை நிலை ஆளுனரும் இதற்கான காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய ஒரு கமிட்டியை அமைத்து தீவிர நடவடிக்கை எடுத்தார்.

கள்ள மதுபான விற்பனை சம்பந்தமாக ஒரு சில தவறுகள் அத்துமீறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் 90 சதவீதத்திற்கு மேல் கள்ள மதுபான விற்பனை கண்டறியப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. துணை நிலை ஆளுனரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

இப்பிரச்சனையை துணை நிலை ஆளுனர் கையாண்ட தன் மூலம் மதுபான விற்பனையில் கூடுதல் வருவாய் அரசுக்கு வருவதற்கான வழிகள் நிச்சயம் துணை நிலை ஆளுனருக்கு தெரிய வந்திருக்கும். கூடுதல் வருவாய் வரும் வழிகளை திட்டமிட்டு ஆளும் ஆட்சியாளர்கள் அடைத்து, குறிப்பிட்ட ஒரு சிலர் நன்மையடைய செய்த பொறுப்பற்ற செயலும் தெரியவந்திருக்கும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு மாநிலத்திற்கு வரவேண்டிய வருவாயை பெருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அரசின் செயலும் ஒரு வித குற்றமாகும்.

இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து காலல்துறை மூலம் மாநில வருவாயை பெருக்க துணை நிலை ஆளுநர் அவர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
துணை நிலை ஆளுனர் அவர்களால் கள்ள மதுபான விற்பனை சம்பந்தமாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவை அவசரப்பட்டு மாண்புமிகு முதல்வர் கலைத்த பிறகு துணை நிலை ஆளுனர் அவர்கள் சிபிஐ விசாரணைக்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றுள்ளார்.

இவர்கள் இருவரின் ஏட்டிக்கு போட்டியால் இப்பிரச்சனை சிபிஐ வரை சென்றுள்ளது தேவையற்ற ஒன்றாகும். மதுபான விற்பனையில் தவறுகள் நடக்கும் போதும், விதிகள் மீறப்படும்போதும் கலால்துறை மூலமாகவே அதிகபட்ச தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படுவது காலல்துறை சட்டத்தில் உள்ளது. இந்த நேரத்தில் சிபிஐ விசாரணையில் துணை நிலை ஆளுனர் கவனம் செலுத்துவதை தவிர்த்து, மதுபான விற்பனையில் அரசுக்கு வருவாய் பெருக்க. கார்ப்ரேஷன் அமைத்து அரசு மதுபான விற்பனை செய்வதையோ அல்லது கள்ளுக்கடை, சாராயக் கடை போன்று மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொது ஏலம் விட்டு அதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் பெருக்குவதில் துணை நிலை ஆளுனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மதுபான தொழிற்சாலைகளில் பெரும் பகுதியை திமுகவின் முன்னணி தலைவர்கள் நடத்தி வரும் நிலையில் மதுபான விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தியது நாடகத்தனமான செயலாகும். முதலில் திமுகவினர் மதுபான உற்பத்தி செய்யும் ஆலைகளை நாங்கள் திறக்க மாட்டோம் அரசுக்கு சரக்கு சப்ளை செய்ய மாட்டோம் என திமுக முன்வந்தால் நல்லது. ஒருபுறம் சரக்கு உற்பத்தி செய்து, சப்ளை செய்துவிட்டு மறுபுறம் மதுபான விற்பனைக்கு எதிர்ப்பு என்பது கடைந்தெடுத்த நாடகத்தனமான செயலாகும்.

தமிழகத்தில் மதுபான கடைகள் திறந்துவிட்ட நிலையில் மாநில வருவாயை கணக்கில் கொள்ளாமல் தனது கூட்டணி கட்சி தலைவர் ஸ்டாலினை திருப்தி படுத்தும் விதத்தில் புதுச்சேரியில் மதுபான கடைகளை திறக்காமல் மாண்புமிகு முதல்வர் மெத்தனம் காட்டி வருகிறார். தமிழகத்தைப் பின்பற்றி சமூக இடைவெளியை ஏற்படுத்தி, புதுச்சேரியிலும் மதுபான விற்பனையை துவக்கலாம். புதுச்சேரியில் உள்ள ஆயிரக்கணக்கான மதுபிரியர்கள் நேற்றைய தினம் தமிழகப்பகுதிக்கு பல்வேறு இன்னல்களுடன் சென்று மதுபானம் வாங்கி வந்ததையும், மாநிலத்தின் வருவாயையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here