வெளிமாநிலத்தில் உள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு வரவேண்டுமா…

0
415
====================ADVERTISEMENT====================

கொரோனா நோய் தொற்றின் காரணமாக நடைமுறைப்படுததப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக கல்வி, வேலை வாய்ப்பு, விடுமுறை, யாத்திரை, மருத்துவ சிகிச்சை மற்றும் பிற காரணங்களுக்காக வெளிநாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்குச் சென்று புதுச்சேரியின் மக்கள் ஆங்காங்கே சிக்கித் தவிக்கிகின்றனர். இதேபோல், புதுவை மாநிலத்துக் பல்வேறு காரணங்களுக்காக வருகை செய்துள்ள பிற மாநிலங்களின் மக்களும் புதுச்சேரியின் பகுதிகளில் ஊரடங்கினால் சிக்கியுள்ளனர்.

அவ்வாறு சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் தங்கள் இல்லம் சென்றடைய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு புதுச்சேரி அரசு அவர்களை பதிவு செய்வதற்காக ஒரு இணைய தளத்தினை உருவாக்கியுள்ளது.
கீழ்கண்டவர்கள்,

  1. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரியை சார்ந்த மக்கள்
  2. பிற இந்திய மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த மக்கள்
  3. புதுச்சேரியில் சிக்கியிருக்கும் பிற இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்
    https://welcomeback.py.gov.in/ என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்த பிறகு வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களைத் திரும்ப கொண்டு வருவதற்கு புதுச்சேரி அரசு இநதிய அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்தும் மற்றவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்தும் இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்காக அரசு செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி திருமதி.பூர்வாகார்க் அவர்களை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், எந்த ஒரு உதவிக்கும் 1077 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த இணையதளத்தினை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மற்றும் செயலர் (வருவாய்), புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் பிற அதிகாரிகள் முன்னிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here