சுபாஷ்சந்திரபோஸ் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கொரோனா நிவாரணம்

0
150
====================ADVERTISEMENT====================

கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலபேர் வாழ்வதாரத்தை இழந்து துன்பப்பட்டு வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு இலாஸ்பேட்டை தொகுதி அசோக் நகரில் சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் மன்றம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசியும், காய்கறிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி இலாஸ்பேட்டை தொகுதி அசோக் நகர் வானவில் பஸ் நிறுத்தம் அருகில் சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் மன்றம் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச அரிசியும், காய்கறிகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியல் சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் மன்றம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here