தற்போது கொரணா வைரஸ் பரவி வருவதை முன்னிட்டு நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இது, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள உதவும். ஆனால், வருகின்ற ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். இது மிகவும் கொடுமையானது. ஆனால், இதையெல்லாம்விட கொடுமையானது இருசக்கர வாகனத்தில் செல்வோரை காவல்துறையினர் ஒரு மாட்டை அடிபோது போல் அடித்து வருகின்றனர். ஒரு மனிதரை அடித்து திருத்துவதை தவிர வேறுவழி இல்லையா. அவர்களை அடிப்பதற்கு பதிலாக வண்டியை பிடுங்கி வைத்து கொள்ளலாம். இல்லை என்றால், அவர்களை அங்கேயே நாள் முழுக்க காவல் துறையினர் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் பணி செய்ய வைக்கலாம். இது போல் பல வழிகள் இருக்கும் போது, ஏதோ காவல் துறையினர் தங்களது பழியை தீர்த்துக் கொள்வது போல அடிப்பது சற்று உரிமை மீறல் ஏன் என்று தெரியவில்லையா ?
ஆளுங்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் அரசு புதுச்சேரி மக்களை அடித்து திருத்துவதைவிட அன்பால் திருத்தினால் நன்மை பயக்கும் என்பது பொது மக்களின் சமூக ஆர்வலர்களின் கோரிககையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here