கொரானா இப்படித்தான் ஆரம்பிக்கும்…… ஆரம்பத்திலேயே உஷாரானால் மட்டுமே கொரோனாவை வெல்லலாம்..!

0
122
====================ADVERTISEMENT====================

கொரோனா தொற்று இந்தியாவில் இருந்து புறப்படவில்லை. அதேநேரம் சீனாவில் உருவான இந்த வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் வெகுவேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வருவோர்களிடம் இருந்தே கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க, வெளிநாட்டில் இருந்து வருவோரையும் தனிமையில் இருக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது

இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.கொரானாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், அதன் அறிகுறிகள் இப்போது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த அறிகுறிகளை கொஞ்சம் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் நம்மால் தப்ப இயலும்.
கொரானா வைரஸ் தொற்றிய முதல் நாள்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், தொண்டைவலி, சிலருக்கு குமட்டல் கூட இருக்கும். நான்காவது நாளில் தொண்டைவலி அதிகரித்து, குரல் கர,கரப்பாகிவிடும். சிலருக்கு சாப்பிடக்கூட முடியாது. 5வது நாளில் தொண்டை வலி அதிகரித்து உணவை விழுங்கும்போது வலிக்கும். உடல் வலியும் கூடும்.
6வது நாளில் காய்ச்சல் கூடும். தொண்டை வலி, வறட்டு இருமல், பேசும்போதும், விழுங்கும் போது வலிப்பது, மூச்சுவிட சிரமம் ஆகியவை இருக்கும். 7வது நாளில் உடல் வலி, தலைவலி, வயிற்றுப் போக்கு அதிகரிக்கும். காய்ச்சலும், வாந்தியும் அதிகரிக்கும். 8வது நாளில் மூச்சுவிடுவது சிரமாகி நெஞ்சு அடைக்கும். தலைவலி, இருமல், மூட்டுக்களில் வலியோடு அதிக காய்ச்சலும் இருக்கும்.
9வது நாளில் இது அத்தனையும் இன்னும், இன்னும் தீவிரமடையும்.அதன் பின்னர் உயிருக்கே வேட்டு வைக்கும் அளவுக்கு நம் உடலுக்குள் கொரானா விஸ்வரூபம் எடுத்துவிடும். இதனால் ஆரம்ப நிலையி லேயே அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவமனைகளுக்கு போவதுதான் கொரோனாவுக்கான சிறந்த வழி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here