புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் முதன்முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

0
51

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துவங்கியது. புதுவையில் நடைபெற்ற முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகும். ஜிப்மர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குழு தலைவர் டாக்டா பிஜு பொட்ட காட் தலைமையில் இந்த அறுவை சிகிச்சை நடந்தது.

கல்லீரல் இழைநார் வளர்ச்சி என்ற நோய் பாதிப்படைந்த புதுச்சேரியை சேர்ந்த 38 வயது நபருக்கு, சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரல் பொருத்தப்பட்டது. மேலும் மூளைச்சாவு அடைந்த நபரின் சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் மேலும் மூன்று நபர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டது. சுமார் 12 மணி நேரம் நடந்த இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் 8 அறுவை சிகிச்சை நிபுணர்கள், 4 மயக்கவியல் நிபுணர்கள் ஆகியோருடன் செவிலியர் மற்றும் இதர மருத்துவ தொழில் நுட்பகுழுவினர் பங்குபெற்றனர்.இந்த அறுவை சிகிச்சைகாக 4அறுவை சிகிச்சை கூடங்கள் ஒரேநேரத்தில் செயல்பட்டன. அறுவை சிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பயனாளி தற்போது நலமுடன் உள்ளார். இந்த மொத்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஜிப்மரின் 14 துறை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களை கொண்டு வெற்றிகரமாக நடத்தப் பட்டது.
அறுவை சிகிச்சை குழுவினரை பாராட்டிய ஜிப்மர் இயக்குனர் டாக்டர் சுபாஷ் சந்திர பரிஜா கூறுகையில், ஜிப்மரில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான செயல் முறைகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக 2 கோடிக்கும் மேல் மதிப்புள்ள கருவிகள் வாங்கப்பட்டது என்றார். மேலும் உடல் உறுப்புகளை தானம் செய்த நபரையும், இத்தனை துயரத்திலும் தமது குடும்ப உறுப்பினரின் உறுப்புக்களை தானம் அளிக்க முன் வந்த அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது நெகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.மேலும் இந்த அறுவை சிகிச்சை மூலம் ஜிப்மர் இந்தியாவில் உள்ள வெகுசில கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையங்களில் ஒன்றாக இணைந்துள்ளது என்றார்.ஜிப்மரில் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கைகள் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

தற்போது நடைபெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவு ஒருலட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. வரும் காலங்களில் செய்யப்படும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ரூ.5 லட்சம் அளவில் செய்யப்படும்.ஆனால் இந்த வசதி தனியால் மருத்துவ மனைகளில் ரூ. 25 முதல் 30 லட்சம் வரை செலவாகும். ஜிப்மர் இயக்குனர், இந்த வசதி ஏழை&எளிய மக்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றுநம்பிக்கை தெரிவித்தார். ஜிப்மர் கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை குழுதலைவர் டாக்டர் பிஜுபொட்ட காட் கூறுகையில், ஜிப்மர் இந்த மாதத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பிரிவை துவங்குகிறது என்றும் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் இந்த சிகிச்சை பிரிவு செயல்படும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here