வழக்குக்காக செலவழித்த பணத்தை திரும்ப கேட்டதாலே இப்படி நிகழ்ந்ததா..? அனிதாவை அரசியல் பகடையாக்கியது யார்..?

0
1646

மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் மிகவும் சிறப்பாக படித்து 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால் அனிதாவுக்கு தமிழகத்தின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கக்கூடும்.

ஆனால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்ததாலும், நீட் தேர்வில் அனிதா மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்ததாலும் அவரால் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை.

ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்களின் நிலை இது தான். நீட் தேர்வு குறித்த சரியான புரிதல் கூட ஏற்பட்டிருக்காத அனிதா போன்ற ஊரக ஏழை மாணவர்களை,

நகர்ப்புற பணக்கார மாணவர்களுடன் நீட் தேர்வு என்ற பெயரில் போட்டியிட வைத்தால் அவர்களுக்கு தகுதியிருந்தாலும் ஏமாற்றமே மிஞ்சும்.

வழக்கு தோல்வி அடைந்த பிறகு பரவாயில்லை நான் விவசாயம் படிக்கிறேன் என்று நேர்மையுடன் சொன்ன மாணவி எப்படி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிந்திருக்க முடியும்.

சாதாரணமாக ஒருவர் ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கிறார் என்றால், எந்த வித பயமும் இல்லாமல் இந்த சமூகத்தை எதிர்கொள்ள பழகி விட்ட தெம்பு கிடைத்து இருக்கும்.

எதையும் எதிர்கொள்ளும் மனநிலையுடன் தான் அனிதா இருந்திருப்பார். ஆனால் அதற்கு மாறாக தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒருவர் தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டால் கிராம நிர்வாக அலுவலர் அங்கே சென்று, அந்த சம்பவம் குறித்த அறிக்கையை காவல் துறையிடம் தெரிவிப்பார்.

அதன் பின்னரே ஊடகங்கள் வர ஆரம்பிக்கும். ஆனால் அனிதா விசயத்தில் எப்படி ஊடங்கங்கள் முன்னரே மோப்பம் பிடித்து அங்கே சென்றிருக்க முடியும்.

அனிதா பள்ளிக்கு செல்லக் கூட வெறும் காலில் செருப்பின்றி நடந்தே சென்று படித்தவர்

தனது ஏழ்மை நிலையையும் தாண்டி கல்விமீது கொண்ட தாகத்தால் அதிக மார்க்குகள் வாங்கினார்

அப்படி இருக்கும் பொழுது டெல்லி சென்று வர விமான டிக்கெட்டுகள் வாங்கி கொடுத்தது யார்.?

மிக உயர்ந்த வசதி கொண்ட விடுதியில் தங்கபணம் கொடுத்த சக்தி எது..?

உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிட்டிங்குக்கு பல லட்சம் வாங்கும் வக்கீலுக்கு பணம் கொடுத்த கல்வி தந்தை யார்..?

அந்த வக்கீல் எவ்வளவு வாங்கினார் யார் கொடுத்தார்கள் என்ற கேள்விக்கு பதில் உண்டா..?

போன்ற சந்தேகத்திற்கிடமான பல கேள்விகள் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், அனிதாவை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது பிரின்ஸ் கஜேந்திரபாபு என்பது குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

இவர் தான் பல முறை அவர் வீட்டில் தனியாக நம் போராட்டம் வெற்றி பெற வேண்டும் இல்லை நம்மால் மற்றவர்களுக்கு வாழ ஏதேனும் செய்து மடிய வேண்டும் என பல முறை கூறியது தெரியவந்துள்ளது.

இவர் ஒரு என்ஜிஓ குருப்பை சேர்ந்தவர். ஏன் இவர் அப்படி ஒரு உயிர் பலியை விரும்பினார் இவர் பின்னால் இருப்பது யார்.?

வழக்கு தோல்வி அடைந்த பிறகு பரவாயில்லை நான் விவசாயம் படிக்கிறேன் என்று நேர்மையுடன் சொன்ன அந்த மாணவியிடம் செலவழித்த பணத்தை திரும்பி கேட்டதால் அந்த பெண் மன உளைச்சல் காரணமாக இறந்து போனாள் என்று உறவினர்கள் சொல்கின்றனர்.

ஆக இந்த விவகாரத்தில் சாதிக்க துடித்த ஒரு மாணவியின் ஏக்கத்தை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடி விட்டனர்.

இதற்கான பலனை வெகு விரைவில் அடைந்தே தீருவார்கள் பிஞ்சு இதழை பறித்து வெந்தழலில் வீசியவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here