ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கையை தொடங்குவோம்: மு.க.ஸ்டாலின்

0
11
ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டப்படியான நடவடிக்கையை தொடங்குவோம் என மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

திமுக செயல் தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மூலம் மத்திய அரசு மிரட்டி கொண்டிருக்கிறது. முதல்-அமைச்சர் பழனிசாமி, பன்னீர்செல்வம் இரு அணிகளாக இருந்த போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் அரசியலில் ஈடுபடுகிறார், தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பின்னாலும் மத்திய அரசு உள்ளது என முதலில் இருந்து சொல்லி வருகிறோம். ஜனாதிபதி நாளை 11 மணிக்கு சந்திக்க அனுமதி வழங்கி உள்ளார். எங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் அவரை சந்திப்போம்.
ஜனாதிபதியை சந்தித்த பின்னரும் தமிழக அரசிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் சட்டப்படியான நடவடிக்கையை தொடங்குவோம் என மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here