உருளையன்பேட்டையில் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

0
38

உருளையன் பேட்டையில் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உருளையன்பேட்டை ராஜா நகரை சேர்ந்தவர் கலியபெருமாள். இவர், புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக உள்ளார். இவரது மகள் காயத்ரி (19). தாகூர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு மனோதத்துவயியல் படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாகவே வீட்டில் சோகமாக இருந்துள்ளார்.

இதுகுறித்து வீட்டில் உள்ளவர்கள் கேட்டபோது, பல்வேறு காரணங்கள் கூறி சமாளித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் கல்லூரிக்கு சென்றார்.

ஆனால், காலை 11 மணிக்கே வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் அவர் தனது அறைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து காயத்ரியின் சித்தி மல்லிகா அங்கு வந்தார். அவர் கதவை தட்டினார். கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

ஜன்னல் ஓரமாக பார்த்த போது, காயத்ரி துப்பட்டாவால் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே கலியபெருமாள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here