ஒருநாள் தொடர் மருத்துவ கருத்தரங்கு

0
20
மருத்துவ அறிவியலில் இரத்தவியல் துறை இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை குறைபாடுகளை கண்டறியும் மிகமுக்கியமான துறையாகும். ஜிப்மர் நோயியல் மற்றும் இரத்தமாற்றுதுறை இணைந்து ஒருநாள் தொடர் மருத்துவ கருத்தரங்கு நடத்தின.

இந்த கருத்தரங்கு இந்திய இரத்தவியல் மற்றும் இரத்த மாற்று சங்கத்தின் புதுவை அமைப்பால் நடத்தப்பட்டது.
ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திரபரிஜா இந்தகருத்தரங்கை மகாத்மாகாந்தி மருத்துவகல்லூரி பேராசிரியர் டி.கே. தத்தா அவர்கள் முன்னிலையில் துவக்கிவைத்தார்.

ஜிப்மர் இயக்குனர் தனது துவக்க உரையில் இரத்தசோகை போன்ற பொதுவான இரத்த குறைபாடு நோய்கள் சாதாரணமாக பெண்களிடம் 55மூ&லும் கருவுற்ற பெண்களிடம் 50மூ&லும் இருப்பதாகவும் இவை எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒன்றாகும் என்றார். ஆனால் இரத்தபுற்றுநோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மருத்துவர்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக விளங்குகிறது என்றார். நிகழ்ச்சியில் புதுடில்லி எய்ம்ஸ் இரத்தஆயல் பேராசிரியர் எச்.பி. பாட்டி, ஜிப்மர் நோயியல் துறை தலைவர்
என். சித்தராஜீ உதவிபேராசிரியர் ராக்கிகார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தஒருநாள் கருத்தரங்கில் புதுவைமற்றும் தமிழகத்தை சார்ந்த மருத்துவ மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் புதுடில்லி எய்ம்ஸ் இரத்தவியல் பேராசிரியர் எச்.பி. பாட்டி ராஜிவ் குமார், பெங்களுர் டி.டி.கே. இரத்தவங்கியின் மருத்துவர் அங்கித் மாத்துர், ஜிப்மர் பேராசிரியர் ராக்கிகார் ஆகியோர் இரத்தவியலின் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். கருத்தரங்கின் இறுதியில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு அளவிலான மாநில வினாடிவினா நிகழ்ச்சிநடத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here