புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்-பாட்னா அணிகள் இன்று பலப்பரீட்சை

0
16
சென்னையை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி இன்று தனது 7-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னாவுடன் மோதுகிறது.

5-வது புரோ கபடி ‘லீக்‘கில் ஐதராபாத், நாக்பூர் , அகமதாபாத், லக்னோ ஆகிய இடங்களில் போட்டிகள் முடிந்தன.

தற்போது 5-வது கட்ட போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.

சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக இதில் விளையாடி வருகிறது.

‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அந்த அணி 6 ஆட்டத்தில் ஒன்றில் மட்டும் வெற்றி பெறவில்லை. 2 போட்டி ‘டை’ ஆனது. 3 ஆட்டத்தில் தோற்று 14 புள்ளியுடன் இருக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி பெங்களூர் புல்சை வென்று இருக்கிறது. அரியானா, ஸடீலர்ஸ, உ.பி. யோதா அணிகளுடன் ‘டை’ செய்தது. தெலுங்கு டைட்டனஸ், பெங்களூர் புல்ஸ், டெல்லி தபாங் அணிகளுடன் தோற்று இருந்தது.

தமிழ் தலைவாஸ் அணி தனது 7-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்சை இன்று சந்திக்கிறது. இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

தமிழ் தலைவாஸ் 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. பாட்னா அணி பலம் பொருந்தியது என்பதால் கடுமையாக போராட வேண்டும். பாட்னா அணி 3 வெற்றி, 1 தோல்வி, இரண்டு டையுடன் 22 புள்ளிகள் பெற்றுள்ளது.

‘ஏ’ பிரிவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மும்பை-புனே அணிகள் (இரவு 9 மணி) மோதுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here