நீட் தேர்வு விவகாரத்தில் புதுச்சேரி அரசு இரட்டை வேடம்

0
21

நீட் தேர்வு விவகாரத்தில் புதுச்சேரி அரசு இரட்டை வேடம்

முன்னாள் ராஜ்யசபா  உறுப்பினர் ப. கண்ணன்.

புதுச்சேரி அரசு மாணவர்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைத்துள்ளது. நீட் தேர்வு பிரச்சனையில் புதுச்சேரி அரசின் நிலைப்பாடு மாணவர்களையும், பெற்றோர்களையும் கொடூரமாக ஏமாற்றி உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் புதுச்சேரி அரசு இரட்டை வேடம் போட்டது பகிரங்கமாகியுள்ளது.

முதல்வர் நாராயணசாமி பொதுவாகவே எல்லா விஷயங்களிலும் இரட்டை வேடம் போட்டு ஏமாற்றுபவர்தான். இப்போது ஒரு பாவமும் அறியாத பிஞ்சு உள்ளங்களின் வாழ்க்கை கனவுகளில் மண்ணை அள்ளி போட்டுள்ளார். எல்லோரையும் ஏமாற்றிய நாராயணசாமி தற்போது இளம் மாணவர்கள் என்று கூட பார்க்காமல், அவர்களுடைய வாழ்க்கையிலும் விளையாடிய தனது விபரீத, தந்திர புத்தியை வெளிப்படுத்தியுள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் புதுச்சேரி அரசு ஆரம்பத்திலிருந்தே ஒரு தெளிவான நிலைப்பாட்டில் இல்லை.

ஊரை ஏமாற்றுவதற்காகவும், குறிப்பாக மாணவர் சமுதாயத்தை ஏமாற்றி மோசடி செய்வதற்காக நீட் தேர்வை எதிர்ப்பது போல் நாராயணசாமியும், அவரைச் சார்ந்தவர்களும் சட்டசபைக்குள்ளும், வெளியும் வேஷம் போட்டுள்ளனர்.
நீட்தேர்வு பிரச்சனை தொடர்பாக நேற்று முன்தினம் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது. ஆனால் புதுச்சேரியில் இவர்கள் எப்பொழுதோ கவுன்சிலிங் நடத்தி, மாணவர் சேர்க்கையை தொடங்கி விட்டனர். தற்போது கவுன்சிலிங் முடியும் தருவாயில் உள்ளது.

என்னுடைய கேள்வி, எந்த நிர்பந்தத்தினால் யாரை திருப்தி ப்படுத்த இந்த அவசரக்கோலம்?. பக்கத்து மாநிலமான தமிழகம் அவசரம் காட்டாமல், தங்களால்முடிந்தஅளவிற்கு மத்திய அரசிற்கு அழுத்தம்கொடுத்து போராடிய நிலையில், இவர்கள் ஏன் அவசரம் அவசரமாக நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்களை சேர்த்தனர்?.

இவர்களுக்கு கொஞ்சமாவது நாணயம் இருக்குமானால், நாங்கள் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் என்று சொல்லியிருக்கலாம். நீட்தேர்வை புதுச்சேரிக்கு ஏற்க மாட்டோம் என்று சொல்லிக்கொண்டு மறுபுறம் நீட் தேர்வின் அடிப்படையில் அசுர வேகத்தில் சென்டாக் மூலம் கவுன்சிலிங் நடத்தி முடித்துள்ளனர்.

நாராயணசாமிக்கு என்ன திறமையிருக்கிறதோ, இல்லையோ மோசடி செய்து ஏமாற்றி தந்திரம் செய்வதில் அவருக்கு நிகர் யாரும் இருக்க முடியாது. டெல்லி சென்று, புதுச்சேரிதிரும்பிய போது இந்த ஆண்டு நீர் தேர்விலிருந்து நமக்கு விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறிய நாராயணசாமி ஏன் கவுன்சிலிங்கை நடத்தினார் என்று கேள்வியெல்லாம் மாணவர் சமுதாயம் கேட்கும் நேரம் நெருங்கி விட்டது.

மாணவர்கள், தமிழகத்தை சேர்ந்தவர்களாக, இருந்தாலும் சரி, புதுச்சேரியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் நீட்தேர்வை சந்தித்து பெற்றிபெற, கல்வி தரத்தை உயர்த்தும் நடவடிக்கையை எடுக்காமல், எந்த ஆதாயத்திற்காக கவுன்சிலிங் நடத்தினார்கள்? புதுச்சேரி அரசு மாணவர்களுக்கு இழைத்த அநீதிக்கும், அநியாயத்திற்கும் தகுந்த பாடத்தை மாணவர்களும், பெற்றோர்களும், கற்பிக்கும் காலம் வெகு தொலைவில்இல்லை. அவர்களுடைய கூட்டணி கட்சியான திமுகவிற்கும் எந்த மரியாதையும் கொடுக்காமல் அவர்களையும் இந்த அநீதியில் பங்கு பெறச் செய்து விட்டார்கள்.

இது தொடர்பாக பல மர்ம முடிச்சுகள் இன்னும் சில தினங்களில் ஒவ்வொன்றாக வெளிவரும் என்பதை ஆட்சியாளர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த அக்கிரமங்களுக்கெல்லாம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கத்தான் போகிறார்கள் மாணவர்களும், மக்களும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here