ஜிப்மரில் 71-வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

0
40
ஜிப்மரில் 71-வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
சுதந்திரதின விழாவில் தேசியகொடி ஏற்றிவைத்து ஜிப்மர் இயக்குனர் டாக்டர் சுபர் சந்திரபரிஜா உரையாற்றினார் தனது உரையில் நாட்டின் வெகுஜன மக்களின் நலனைகாத்திடவும் மேம்படுத்தவும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார். மேலும் நம் முன்னோர்ளின் தியாகத்தினால் தான் இன்று சுதந்திரமான சூழ்நிலையை அனுபவிக்க முடிகிறது என்றார்.
 ஆகையால் ஆரோக்கியமான மற்றும் உற்சாகமான இந்தியாவை உருவாக்கிட இளைஞர்கள் அர்பணிப்புடன் உழைக்கவேண்டும் என்றார். மேலும் ஏழை எளியமக்களுக்கு தன்னலமின்றி சேவைசெய்யும் ஜிப்மர் ஊழியர்களை பாராட்டிய அவர், தகுதியான மற்றும் அடித்தட்டு மக்களுக்கான சேவையை ஜிப்மர் விரிவுபடுத்தும் என்றார். தற்போது ஜிப்மர் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறமுனைந்துள்ளது மூலம் பாரதபிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களின் கனவான “இந்தியஉற்பத்தி”யை ஜிப்மர் நனவாக்கிடும் என்றார். விழாவில் மாணவர்கள்
பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினார். பின்னர் தேசியபற்று பாடல்கள் இசைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here