புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. முயற்சி: நல்லக்கண்ணு

0
14
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா, புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்ததன் மூலமாக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் நல்லக்கண்ணு குற்றம்சாட்டி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. குருசாமியின் உருவப்படம் திறப்பு மற்றும் புத்தக வெளியீட்டு விழா புதுவை முதலியார் பேட்டையில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளரான விசுவநாதன் தலைமை தாங்கினார். கட்சியின் தேசிய குழு உறுப்பினர் நல்லக்கண்ணு குருசாமியின் உருவ படத்தை திறந்து வைத்து அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வெளியிட்டார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், தேசிய குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், கம்யூனிஸ்டு நிர்வாகிகள் சலீம், அபிஷேகம், கீதநாதன், சேது செல்வம், முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டெல்லியில் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து பேச வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கார்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாகவும், விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கத்திலும் செயல்படுகிறது.

மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி பல மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற அ.தி.மு.க.வை அணிகளாக பிரித்துள்ளது.

புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்ததன் மூலமாக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறது. மேலும் கவர்னர் மூலமாக மாநில அரசுக்கு தொல்லை கொடுப்பது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபடுகிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here